மத்திய வங்கி முறி மோசடி விசாரணை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்பொரலை கெம்பல் மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்ற ஐ.தே.க.யின் விசேட கூட்டத்தில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளுமாறு எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன. உலகில் எந்த நாட்டில் இவ்வாறு விசாரணை ஆணைக்குழு வைத்து நடைமுறையிலுள்ள அரசாங்கமொன்றை விசாரணை செய்ய அனுமதிப்பது எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.