பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பான அடிப்படையில் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது மஹிந்த ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைகளை மட்டுமே அமுல்படுத்தி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பொலிஸ்மா அதிபர் ஒருவர் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.