( ஹபீல் எம்.சுஹைர் )
மு.காவின் அரசியல் செயற்பாடுகளானது மக்களை அடிப்படையாக கொண்டதோ அல்லது சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்தோ
அமைவதல்ல. அவர்கள் பாட்டில் ஏதோ செய்வார்கள். அவர்களுக்கு தேவை என்றால் எதனையும் மாற்றுவார்கள். எதனையும் எப்படியும் பயன்படுத்துவார்கள். அந்த வகையிலான அவர்களது செயற்பாடுகள் சம்மாந்துறையில் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு, சம்மாந்துறை பிரதேச சபையின் குப்பை அள்ளும் வாகனங்கள், மு.கா கட்சிக் கொடிகளை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்சிச் செயற்பாடுகளுக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும். சம்மாந்துறை மு.கா அரசியல் வாதிகள், சம்மாந்துறை பிரதேச சபையின் குப்பை அள்ளும் வாகனங்களை கூட விட்டு வைக்கவில்லை. இவர்களிடம் பிரதேச சபையை ஒப்படைத்தால் என்னவாகும்?
அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு, மு.காவினர் தேசியக் கொடிகளை தலை கீழாக பறக்கவிட்டு தேசிய ரீதியான பிரச்சனைகளை கிளப்பிவிட்டிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் காரைதீவு சந்தியில் முற்று முழுதாக சட்டத்துக்கு முரணான வகையில் பிரயாணம் செய்து சர்ச்சையை கிளப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய கட்சியின் தலைவரே சட்டத்துக்கு மதிப்பளிக்காத போது, போராளிகளிடம் சட்டம் பேணுதலை எதிர்பார்ப்பது தவறானதாகும்.