Top News

சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கிடைப்பது உறுதி - பைசர் முஸ்தபா






உள்ளுராட்சி மன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக இன்று (2018.01.18) மாலை சாய்ந்தமருதில் பரடைஸ் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை கிடைப்பது உறுதியளித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது மக்கள் மிகவும் மனவருத்தத்துடன் இருப்பீர்கள். காரணம் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை பெற்றுத் தருவதாக கூறி இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. நீங்கள் என்னையும் ஏமாற்றுக்காரர்களில் ஒருவராக நினைத்த விடாதீர்கள்.  நான் உங்களுக்கு வாக்குறுதி அளித்தது போல பிரதேச சபையை பெற்றுத் தருவேன் என்று கூறினார்.

இது தொடர்பாக நான் ஜனாதிபதியிடம்  வினவிய போது இந்த விடயம் தொடர்பில் அனுமதி அளித்துள்ளார். இன்ஷா அல்லாஹ் உங்களுக்கான  தனியான பிரதேச சபை மிக விரைவில் அமைத்து தருவோம். ஏமாற்று அரசியல்வாதிகளை இனிமேலும் நம்பாமல் நீங்கள் ஒற்றுமைப்பட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்றார்.
Previous Post Next Post