Top News

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசிகள், பயன்படுத்துவது சட்டவிரோதம்



உள்ளூராட்சித் தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுடன், தேர்தல் ஆணைக்குழு நேற்று நடத்திய பேச்சுக்களின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் இருந்த 400 மீற்றருக்கு அப்பால் முப்படைகளையும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசிகள் பயன்படுத்துவது, மற்றும் வாக்குச்சீட்டுகளை படம்பிடிப்பது சட்டவிரோதமானது. அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அஞ்சல் வாக்குகள், எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் நாள் மூத்த அஞ்சல் அதிபர்களிடம் கையளிக்கப்படும். எனினும், 10ஆம் நாள் பிற்பகல் 4 மணிக்கு ஏனைய வாக்குகளுடன் சேர்த்தே அவையும் எண்ணப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post