பதவி காலத்தை நீடிப்பதற்கு சென்று தனக்கு ஏற்பட்ட சறுக்கல் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆட்சி காலம் நிறைவடைவதற்கு மேலும் இரண்டு வருடங்கள் இருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமையினால் அனைத்தும் தலைகீழாக மாறியது. அதே முறையில் செயற்பட முயன்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும் அதேநிலை ஏற்பட்டுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கடுவெல, அரங்கல பகுதியில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“நான் இரண்டு வருடங்கள் இருந்த போதிலும் தேர்தலை நடத்தினேன் என பலர் திட்டித்தீர்த்தார்கள். நான் இரண்டு வருடங்களை தியாகம் செய்தேன்.
வேலை பிழைத்து விட்டது. அப்படி என்றால் அது ஒரு தியாகம். எனினும் மைத்திரி என்ன செய்கின்றார்? 5 வருடங்கள் போதாமல் 6 வருடங்களாக்கி கொள்ள முயற்சித்தார். அங்கு தான் எனக்கு நடந்த விடயம் அந்த மனிதனுக்கும் நடந்துவிட்டது. அதனையும் தற்போது தியாகம் என கூறலாம்.
அதனால் தான் ஆலோசகர்களிடம் அவதமானமாக இருக்க வேண்டும். இதனை எப்படியாவது முடித்து தருகின்றேன் என ஆலோசகர்கள் கூறுவார்கள் எனினும், அவை நடக்காது”.. என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.