Top News

பல்கலைக்கழக அனுமதிக்கான, விண்ணப்பப்படிவங்கள் நேற்று வெளியாகின



பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் வெளியாகியுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று -04-  வெளியாகியுள்ள இந்த விண்ணப்பப் படிவங்களை, கொழும்பு 02 இல் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், நூல் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் இந்த விண்ணப்பப் படிவத்தை பெற்று குறித்த திகதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

எனினும் விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய இறுதித் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post