எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து தேர்தலில் போட்டியிடும் கட்சியின் செயலாளர்களுக்கு நேற்றைய தினம் கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில வேட்பாளர்கள் இதுவரையில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில், 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.