Top News

சிறந்த பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் காலத்தின் தேவை



தெரிவில் நேரடியாக பள்ளிவாயல்கள் தலையிட்டு இருந்தால் அது சமூகத்திற்கு நன்மையாக இருந்திருக்கும் அல்லவா..? 

பள்ளிவாயல்களின் ஒத்துழைப்புடன் நமக்கானவர்களை நாமே தெரிவு செய்திருக்க வேண்டும். தவறிவிட்டோம் இனியாவது ஒழுக்காமாக வட்டாரத்தை உருவாக்க பள்ளிவாயல்கள் மக்களுக்கு விழுப்புணவர்களை வழங்க வேண்டும், ஜம்மியதுல் உலமா பள்ளிவாயல்கள் நிறுவாகிகளிடம் தேர்தலில் ஒழுக்கமாவர்களை தெரிவு செய்ய வேண்டும் என கோரியதாக அறிந்து பின்பே இப்பதிவை எழுதுகின்றேன் ஏன் என்றால் நான் வாக்காளன் நல்லவர்களை  தெரிவு செய்ய நாம் தவறிவிடுவோமோ? என அச்சம்கொள்கின்றேன். 

தேர்தலில் சிறந்த முன்மாதிரியானவர்களை தெரிவு செய்ய வழிகாட்டுவதும், போதை வஸ்துக்களுக்கு அடிமையாகியுள்ள எமது வாலிபர்களை பாதுகாப்பதும் உலமாக்களின் மிகப் பெரிய பொறுப்பு ஆனால் இவ்வாறு எந்த உலமாக்களும் வேட்பாளர்களை பார்ப்பதும் இல்லை! அவர்களிடம் இத்தேர்தலில் சமூக நலன் தொடர்பில் எவ்வித மார்க்க நிறுவனங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதும் இல்லை! இஸ்லாமிய முறைப்படி நல்லதொரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் விட பள்ளிவாயலுக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. 

குறிப்பாக நாம் முஸ்லிம் சமயம் சர்ந்தவர்கள் நம் மக்களை ஆழ்வது நல்லதொரு சமூகத்தலைவனை உருவாக்க மற்றவர்களை விட பள்ளிவாயல் முக்கிய பொறுப்பில் உள்ளது. ஆனால், இலங்கை அது எத்துனை வீதம் உள்ளது என சிந்திக்க வேண்டும். இது தொடர்பில் பள்ளிவாயல்களும் அதன் நிருவாகமும் அமைதியாக இருப்பதன் நோக்கம் என்ன..? குறிப்பாக கிழக்கு அரசியல் பள்ளிவாயலின் தொடர்பு முக்கியமானதாக இருக்க வேண்டும் அல்லவா..?? இது எம் சமுகத்தை ஆழ்வதற்கானவர்களை வெளியில் இருந்து தங்கள சுயநலங்களுக்காக அரசியல்வாதிகளாக இருக்கும் சிலர் இடம்கொடுத்து அவர்களுக்கு விரும்பியவாறு வேட்பாளர்களை இடுகின்றனர். இதை சற்றாவது நமது இஸ்லாமிய சூழலில் உள்ள முக்கியஸ்தர்கள் கவனிக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன.?? 

அண்மையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபை தேர்தலில் சம்பந்தப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் மார்க்க வரையறைகளைப் பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும்  மாநாட்டினை இலங்கை ஜம்மியதுல் உலமா  நடாத்தி கேட்டுக்கொண்டது அல்லவா..??  சமூக உணர்வும் பொதுநல மனப்பான்மைiயும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு ஜம்மியதுல் உலமா ஒவ்வொரு மாவட்ட/பிரதேச பள்ளிவாயல்கள் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது. பார்ப்போம் இதன் பின்பும் இவர்களுக்கு சமூக அக்கறை இருக்கின்றதா என்று, அதன் பின் என்னதான் செய்கின்றார்கள் என பார்ப்போம். 

குறிப்பாக வேட்பாளர்களை கட்சிகள் நிறுத்தும் போது பள்ளிவாயல்களை இவ்விடயத்தில் முக்கியத்துவம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நம் பிரதேசத்தை சார்ந்தவர்கள் ஏனோ/தானோ என்ற வகையில் அமைதியாக இருந்தார்கள் தவிர எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. 

அன்மையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பொறுத்தவரையில் தேசியப்பட்டியல் தொடர்பாக அது கிடைக்கவில்லை என பெரியபள்ளிவாயல் மூக்கை நுழைத்திருந்தது ஆனால் வேட்பாளர்களை இடும் செயத்திட்டங்களில் அவர்கள் மூக்கை நுழைத்திருக்கவில்லை. சாய்ந்தமருது பிரதேசத்திற்கான சபையை பெற வேண்டும் என நோக்கில் அரசியல்வாதிகளை விரட்டியடித்து பள்ளிவாயலின் நேரடிக்கட்டுப்பாட்டில் அவர்களின் உரிமைகளை பெற பள்ளிவாயலில் காத்திரமான முடிவினை நாம் வரவேற்க வேண்டும். குறிப்பாக அப்பிரதேச மக்களின் தாகம் அப்பிரதேசத்தை சார்ந்த மக்களுக்குத்தான் தெரியும் எனபதுதான் யதார்த்தம்! 

இது வட்டார தேர்தல் முறை இது வட்டாரத்தில் எவ்வாறன நபரை குறிப்பாக மார்க்கப்பற்று, கெட்ட பழக்கங்களில் இருந்து தவிர்ந்துகொண்டவர்களையும், சமூக ஏமாற்றுக்காரர்களையும் பள்ளிவாயல்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள், அவர்களின் ஆலோசனையில் இருந்திருந்தால் நமது வட்டாரங்கள் (அனைத்தும்) செழிப்பானவர்களை நிறுத்தி ஒருமித்த குரலை உண்டுபன்னி நமக்கானவர்களை நாமே தெரிவு செய்திருக்கலாம் அல்லவா..? 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளி மேடைகளில் இருப்பார்கள். அவர்கள் தமது நிர்வாகத்திலும் குடும்பத்திலும் தாம் பொறுப்பேற்றுக்கொண்டவற்றிலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). (நூல்: முஸ்லிம்)

இலங்கை அரசியலை பொறுத்தவரையில் சிங்கள ஆதிக்கமே மிகவும் அதிகம் அவர்களின் முக்கிய தீர்மானங்களுக்கு முக்கியம் இடம் எது தெரியுமா..?? அஸ்கீரியபீடம்..!! ஆனால் நாம் நமது அரசியல்வாதிகள் பள்ளிவாயல்களை மேற்கோள்காட்டி எவ்வித அரசியல்களையும் முன்னெடுக்கின்றார்களா..? என சற்று சிந்தியுங்கள். ஜம்மியதுல் உலமா நேரடியாக அரசியலில் விடயங்களில் பங்குகொள்ள கோரிய மக்களுக்கு நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறு (தற்போது) கோரியதும் குறிப்பிடத்தக்கது. 

ஆகவே அதற்கமைய பள்ளிவாயல்களுக்கு மக்களுக்கு சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்ய ஜம்மியதுல் உலமா கோரிமைக்கு அமைவாக உலமாக்களின் விழிப்புணர்வுகள் மூலம் நமக்கான பிரதிநிதிகளை சிந்தித்து பெற்றுக்கொள்ளுங்கள் (இலங்கை முழுவதும்) 

(எந்த கட்சிக்கு சார்பு இல்லாத, எந்த நபருக்கும் சார்பு இல்லாத பொதுவான பதிவு) 

சிந்தியுங்கள், வாக்களியுங்கள், சிற்ந்தவரை தெரிவு செய்து மக்களுக்கு இஸ்லாமிய முறையில் ஆட்சியை கொண்டுவருவதன் மூலம் நண்மை பெறலாம். வட்டார தேர்தல் முறைமையால்: குடும்பத்தை நினைத்தே பலர் வேட்பாளர்களை இடுகின்றார்கள். அது சாதகமா..? சற்றுசிந்தியுங்கள்.? நமக்கான பிரதிநிதிகளை நாம் முழுமையாக பெற்றுவிடுவோம்..? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! 


சப்னி அஹமட்
அட்டாளைச்சேனை 
Previous Post Next Post