Top News

மகிந்தவை சிறையில் போடும் வரை ஓயப்போவதில்லை



முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெலிகடை சிறையில் அடைக்கும் வரை ஓயப்போவதில்லை என நல்லாட்சி அரசாங்கத்தின் ஆதரவு தேரர் தம்பத அமில தேரர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு அமைவாக மீண்டும் மஹிந்த ராஜபபக்‌ஷவால் ஜனாதிபதி ஆக முடியாது என கூறிய அவர் அவர் மோசடி மூலம் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்க மக்கள் பலம் ஒன்றை சேர்த்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தாஜுதீன் கொலை உற்பட பல விடயங்கள் ஜனாதிபதி மாளிகையின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்றது என்பதை ஆதாரத்துடன் நிருபித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெலிகடை சிறையில் அடைக்கும் வரை ஓயப்போவதில்லை என அவர் சூளுரைத்துள்ளார்.

ஹொரன பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி பிரசார கூட்டத்தில் இதனை அவர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post