ஹம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட பாலங்களில், உடும்பு போன்ற ஊர்வன இனத்தை சேர்ந்த பிராணிகள் மாத்திரமே பயணிப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஆனால், நல்லாட்சி அரசாங்கம் நிர்மாணிக்க ராஜகிரிய மேம்பாலத்தில் தினமும் ஒரு இலட்சத்து 74 ஆயிரம் வாகனங்கள் பயணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்திற்கு கப்பல்கள் எதுவும் வருவதில்லை. மீன்கள் மாத்திரமே வருகின்றன. அத்துடன் மத்தள விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவதில்லை. மயில் போன்ற பறவைகளே வருகின்றன.
மேலும், ராஜபக்சவினரே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கடனாளியாக மாற்றி அதனை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றியதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.