கொழும்பில் பிரபல சர்வதேச உணவகத்தில் நடந்த அதிர்ச்சி! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

NEWS
FILE PIC

கொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. விரைவான ஆடம்பர உணவுகளை உட்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் பலர், KFC போன்ற வரைவு உணவு பெற்றுக் கொள்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு KFCயில் பெற்று கொண்ட உணவினால் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
KFCயில் இணையம் மூலம் கோழி பொறியலை பெற்றுக் கொண்ட நபர் ஒருவரே இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.

கோழியை ஒழுங்கான முறையில் கழுவி சமைக்காமையினால் அதில் இரத்தம் படிந்து காணப்பட்டுள்ளது. அந்த கோழியை குறித்த நபர் KFCக்கு எடுத்து சென்ற போதிலும், அதன் அதிகாரி குற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

விருப்பம் என்றால் பணத்தை திருப்பி தருகின்றேன் அல்லது வேறு கோழியை தருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நபர் கடுமையாக அதிகாரியுடன் வாதாடியுள்ளார். எனினும் இறுதி வரை குற்றச்சாட்டை அதிகாரி ஏற்றுக் கொள்ளாமையினால் குறித்த நபர் அதனை காணொளியாக எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே KFC போன்ற இடங்களில் உணவு பெற்றுக் கொள்பவர்கள் உணவின் தரம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொது மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.


6/grid1/Political
To Top