Top News

மிக வெப்பமான சஹாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு!


உலகிலேயே அதிக வெப்பம் நிலவ கூடிய சஹாரா பாலைவன பகுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய இடங்களுல் ஒன்று சஹாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருகிறது.
 
சுமார் 15 அங்குலம் உயரத்துக்கு பனிக்கட்டிகள் பாலைவனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 
 


ஐரோப்பிய பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக அழுத்தம் மற்றும் குளிர் காற்று இந்த பனிப்பபொழிவுக்கு காரணமாக இருக்கலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Previous Post Next Post