தமக்கு ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா ஜனாதிபதியாக பணியாற்ற முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றத்திடம் வினவியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பழைய அரசியல் அமைப்பின் படியே நான் ஜனாதிபதியாக சத்திபிரமாணம் செய்தேன் அதன்படி எனக்கு ஆறு வருடங்கள் ஜனாதிபதியாக பணியாற்ற முடியும். எனினும் பின்னர் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் தமக்கு ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா பதவி வகிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி உயர் நீதின்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த கோரிக்கை குறித்து ஆராய்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி தமது தீர்ப்பை உயர் நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.