Top News

கணித விஞ்ஞான பிரிவில் மாணவர் தொகையை அதிகரிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்



கணித விஞ்ஞான பிரிவில் மாணவர் தொகையை அதிகரிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்

கல்வி அபிவிருத்தி ஆலோசனை கூட்டத்தில் ஆராய்வு செய்தல் வேண்டும்

சபரகமுவ மாகாண பாடசாலை மாணவர்கள் விஞ்ஞான கணித பாடத்துறையில் கா.பொ.த உயர்தரம் கற்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும். இந்த விடயத்தை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது தெளிவு படுத்த வேண்டும். கணித விஞ்ஞான பிரிவில் கற்போரின் தொகையை அதிகரிப்பதற்கு ஏற்புடைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க பட வேண்டும். 

மேற்படி விடயம் தொடர்பாக சபரகமுவ மாகாணத்தில் சிங்கள மொழியில் கணித விஞ்ஞான துறைகளில் ஆர்வம் மற்றும் உக்குவிப்புக்கள் வழங்கப்படுவதைபோல் தமிழ் மொழியிலும் வழங்கப்படல் வேண்டும். ஆசிரியர்களுக்கு தமிழ் மொழியில் கருத்தரங்குகள் வழங்கி விஞ்ஞான கணித துறைகளில் மாணவர்களை ஆர்வம் வரவைக்கும் முறைகள் தொடர்பாக கலந்துறையாடப்படல் வேண்டும். பாடசாலைகளில் பெற்றோர் கூட்டம் வைத்து கணித விஞ்ஞான பிரிவில் தமிழ் மொழி மூலம் ஆர்வம் குறைவாக காணப்படுவதால் சமூக பிரச்சினைகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைகள் முக்கிய வேலை வாய்ப்புகளில் இடர்பாடு போன்ற  விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்படல் வேண்டும்.

 அதிக பட்டதாரிகள் வேலையில்லாமல் போராட்டம் நடாத்துவதும் கலைபிரில் என்பதையும் எடுத்து காட்ட முன்வரல் வேண்டும் மாகாண கல்வி அமைச்சு. சபரகமு இரத்தினபுரியில் தமிழ் மொழியில் கணித விஞ்ஞான பிரிவில் சாதாரண தர பரீட்சை பேறுகள் அடைவு குறைவதற்கும் காரணம் ஆசிரியர் பற்றாக்குறை இதற்கு காரணம் உயர்பிரிவில் உள்ள இடர்படுகள் ஆகும் எனவே இதனை மாகாண கல்வி அமைச்சு மும்முரமாக கணித விஞ்ஞான பிரிவில் உயர் தரம் தொடர்பாக கவனம் செழுத்த வேண்டும்.
Previous Post Next Post