கிழக்கில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் சமூகத்தை அடிமையாக்கும் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தெளிப்வுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
மூதூர் பிரதேசத்தில் (2018.01.13) சனிக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வட்டார முறையில் நடைபெற இருக்கும் இத்தேர்தல் முறை கொண்டுவரப்பட்ட நோக்கம் தெரியாமல் சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியிலான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள். கிராமங்களில் வாழும் சாதாரண பொதுமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவே இந்த தேர்தல் நடத்தப்படுகிறது பழைய தேர்தல் முறை மூலம் பிரதேச நகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் உறுப்பினர்களை பெற முடியாத சூழ்நிலைகள் காணப்பட்டது. அதை நிவர்த்தி செய்து ஒவ்வொரு வட்டாரம் சார்பாகவும் ஒரு பிரதிநிதியை உள்ளூராட்சி சபைக்களுக்கு அனுப்பி அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் இத்தேர்தல் மூலம் சமூகத்தின் உரிமைககளை பெற்றுதருகிறோம் உரிமைகளை பாதுகாப்போம் என கூறி கிழக்கில் உள்ள சிறுபான்மை கட்சிகள் இனவாத ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுப்பதை பார்க்கும் பொது மிகவும் வேடிக்கையாக உள்ளது. பதினைந்து இருபது வருடங்களுக்கு மேலாக அரசியலில் இறக்கும் அவர்களுக்கு இந்த அடிப்பட அரசியல் அறிவு கூட இல்லையா என நினைக்க தோன்றுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இத்தேர்தலால் எவ்வாறு உரிமைகளை பெற்றுத்தர முடியும் என புரியவிலல்லை.
அதிலும் குறிப்பாக ஒரு அமைச்சர் யானைக்கு அளிக்கப்படும் வாக்குகள் சமூகத்தை அடிமையாக்கும் என கூறியிருக்கிறார். ஆனால் அந்த அமைச்சரின் கட்சி வடக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் யானை சின்னதிலயே போட்டியிட்டுகிறது. அத்துடன் திருகோணமலையில் கூட இவர்கள் யானை சின்னத்தில் போட்டியிடவே கடைவரை முயற்சி செய்தார்கள்.
கிழக்கில் யானைக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுபவர்கள் வடக்கில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் முன் தெளிவு படுத்த வேண்டும். கிழக்கில் ஒரு பேச்சும் வடக்கில் வேறொரு பேச்சும் பேசும் இவர்கள் எப்படி சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கபோகிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஆகவே அடிமட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கொண்டுவரபட்ட இத்தேர்தல் முறையின் சகல அனுகூலங்களையும் நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றால்தான் உங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். இன்னும் இருப்பது வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பிரதேச அபிவிருத்திக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாகளியுங்கள் என கூறினார்.
ஊடகப்பிரிவு