Top News

டிரம்பிற்கு எதிராக பாகிஸ்தானில் பாரிய ஆர்ப்பாட்டம்!



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடியமையைக் கண்டித்து  பாகிஸ்தானின் கராச்சியில் இன்று (02) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கராச்சியில் ஒன்றுகூடியவர்கள்  பாகிஸ்தானின் தேசியக்கொடிகளை தாங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அமெரிக்காவுக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். அத்துடன் அமெரிக்க தேசியக்கொடியையும்  தீயிட்டு எரித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடியுள்ளார்.
“தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 33 பில்லியன் டொலர்களை பாகிஸ்தானிற்கு நிதியாக அளித்துள்ளோம். ஆனால் பாகிஸ்தான் அதனைத் திருப்பிக் கொடுக்காது, பொய்யும் துரோகமும்  செய்து வருகின்றது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் அரசு முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது . அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் அதேவேளை, அவர்களுக்கு இருப்பிடமளித்து, அவர்களை வளர்க்கும் நடவடிக்கையிலும் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது.  இனியும் இதனை அனுமதிக்க மாட்டோம் எனவும் டிரம்ப் அதிரடியாக தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post