Top News

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த உள்ள ஒரே வழி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு



முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கொழும்பு முஸ்லிம்களுக்கு உள்ள ஒரே வழி ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ...

எதிர்வரும் 2018ம் ஆண்டு  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பானது முற்றிலும் புதியதும் தூய்மையானதுமான சிந்தனையில்,கொழும்பில் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகள் மற்றும்  நாட்டின் 10 பல்வேறு பகுதிகளில் போட்டியிடுகிறது.

இக் கூட்டமைப்பில் நன்கு படித்த, மார்க்கப்பற்றுள்ள,சமூக சிந்தனையுடன் சமூக சேவைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற சிறந்த வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள அதேவேளை இதுவே இக்கட்சியின் மிகப் பெரும் பலமாகும்.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பானது மத பேதங்களுக்கு அப்பால் சென்று சகல இனத்தையும்  மதங்களையும் சேர்ந்த வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது.

இத்தேர்தலானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.ஒரு சபையானது,அதானால் ஆழப்படுகின்ற பிரதேசத்தின் தேவைகளை நிவர்ப்பிப்பதில் பெரும் பங்காற்றும்.

கொழும்பு என்பது ஒரு மாநகர சபை அந்தஸ்துடையதாகும்.அந்த அந்தஸ்தை பயன்படுத்தி பல விடயங்களை சாதித்து நாம் கொள்ளலாம்.மிகக் சிறிதளவான தேவையே கொழும்பு நகரத்துக்கு மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது.

கொழும்பு மத்தி பிரதேச மக்களை பொறுத்தமட்டில்,தேசிய பிரதான கட்சிகளுக்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.எம்மை தேடி வந்து சேவை செய்ய வேண்டிய கடப்பாடுடையவர்கள்,நாம் பல தடவைகள் முறையிட்டும்,எமது தேவைகளை நிவர்த்திப்பதாகயில்லை.

மூன்று வருட காலமாக ஆளும் அரசு, மத்திய கொழும்பு மக்களுக்கு என்ன செய்துள்ளது?

இதற்கு காரணம், நாம், எமது கைகளால் வாக்களித்து அனுப்பியவர்கள் தானே தவிர ,வேறு யாருமில்லை. கட்சி, சின்னம் போன்ற சிந்தனைகள் எமது உள்ளத்தில் ஆழமாக பதிந்திருப்பதால்,அதனை பார்த்து வாக்களித்து  ஊழல் வாதிகளையும், ஒழுக்க நெறியற்றவர்களையும், சமூக துரோகிகளையும்  நாம் தெரிவு செய்கின்றோம்.

மத்திய கொழும்பு பிரதேசத்து மக்கள் பல தொடர்  ஏமாற்றங்களை சந்தித்துள்ளார்கள். இங்குள்ள பிரதான கட்சிகளோ, இங்கு ஐம்பது வருட காலமாக ஆட்சியை தக்க வைத்துள்ளதாக மார்பு தட்டிக் கூறுகின்றனர்.இவர்கள் மார்பு தட்டி கூறுவதே எமது பலவீனமே.

நாம் காலாகாலமாக வாக்களிப்பவர்கள் எமது தேவைகளை நிறைவு செய்யாது போனாலும் நாம் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்ற சிந்தனை மாறவேண்டும். அதற்கு இத் தேர்தல் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக மத்திய கொழும்பு மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எமது நோக்கம், எமது பிரதேசத்து தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது தான். எமது பிரதேசத்து தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வண்ணம் அழகிய சிந்தனைகளுடனும்,தரமிக்க வேட்பாளர்களுடனும்  களமிறங்கியுள்ள எங்களது கூட்டமைப்பை ஆதரிப்பதனூடாக, எமது பிரதேசத்தை வளம் பெறச் செய்வதோடு, பிரதான கட்சிகளுக்கும் நாம் பாடம் புகட்ட வேண்டும்.

நாம் தொடர்ந்தும் அவர்களுக்கே வாக்களித்தால், எம்மைப் போன்ற ஏமாளிகள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். உங்களது பெறுமதியாக வாக்குகளை வண்ணாத்தி சின்னத்துக்கு அளித்து, எங்களது கரங்களை பலப்படுத்துமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம். எங்களது வெற்றி மக்கள் வெற்றியாகும்.

மவ்லவி ஐ என் எம் மிப்லால்,
தலைவர்,
ஐக்கிய சமாதான முன்னணி.

Previous Post Next Post