அட்டாளைச்சேனை மக்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது; நசீர் வாக்குமூலம்!

NEWS
1 minute read

பைஷல் இஸ்மாயில் 
கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்றைய (06) நாள் முழுவதும் அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்திலுள்ள மக்களை சந்தித்தனர்.
அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்ற தமீம் ஆப்தீனை ஆதரித்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

மக்களிடத்தில் கட்சி பற்றிய தப்பான அவிப்பிராயங்கள் கடந்த மாதங்களாக தோன்றிக் காணப்பட்டு வந்தன. அதில் அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் வாக்ககுறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்சியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை தரவேண்டும், இல்லை என்றால் நாங்கள் ஒருபோதும் கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை என்று கட்சியையும், கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீமையும் எதிர்த்து அட்டாளைச்சேனையிலுள்ள கட்சியின் போராளிகள் செயற்பட்டு வந்தனர்.

இது தொடர்பாக, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் அறபா வட்டாரத்திலுள்ள போராளிகளை சந்திப்பதற்காக இன்றைய நாள் முழுவதும் வீடு வீடாகச் சென்று அவர்களுக்கு மிகத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்தார்.
6/grid1/Political
To Top