Top News

தனது வட்டார ஆழம் தெரியாமல் காலை விட்ட மாஹிர்!



தற்போது சம்மாந்துறையில் தேர்தல் மிகவும் சூடு பிடித்துள்ளது. இதில் பல முக்கிய நகர்வுகளும் அமைந்துள்ளன. அந்த வகையில் வீரமுனை வட்டாரத்தில் போட்டியிடும்  முஸ்தபா லோயர் தோல்வியை தழுவி, இத் தேர்தலோடு தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொள்வார் என்று எனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தேன்.

இத் தேர்தல் முன்னாள் மாகாண உறுப்பினர் மாஹிருக்கு மிகவும் சவாலானது என  சம்மாந்துறையில் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. இதுவும் சம்மாந்துறை தொடர்பான தேர்தல் சுட்டிக்காட்டல்களில் முக்கிய ஒன்றாகும்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஐந்தாம் வாட்டாரமான தைக்கா வட்டாரத்தில் போட்டி இடுகிறார். இது இவரது சொந்த வட்டாரமாகும். ஆரம்பத்தில் மு.காவினர் மாஹிரை முன்னாள் தவிசாளர் நௌசாத்துக்கு எதிராக வீரமுனை வட்டாரத்தில் போட்டியிட வைக்க முயன்றுள்ளனர்.

 இதனை அவர் மறுத்து தனது வட்டாரத்தை கேட்டதாக சில கதைகள் சொல்கின்றன. அதிலிருந்து அவர் மிகச் சாதூரியமாக தப்பித்துக் கொண்டார் எனலாம். இவரை எதிர்த்து தம்பிக்கண்டு மாஸ்டர் போட்டியிடுகிறார். இவர் குறித்த வட்டாரத்தை சேர்ந்தவரல்ல. அவ் வட்டாரத்தில்  தைரியமாக களமிறங்குகின்றார் என்றால், அங்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கும். இவர் உப தவிசாளராக இருந்தவர். முக்கிய தேர்தல்களிலும் களமிறங்கி சொல்லுமளவான வாக்கை பெற்ற ஒருவர்.

இந்த வட்டாரத்தில் அவரது குடும்பங்கள் செறிந்து வாழ்கின்றன. குறிப்பாக தைக்காப்பள்ளி, மபாசா பள்ளி, நெசவாலையை அண்மித்த பிரதேசங்களில் அவரது குடும்பம் அதிகளவில் செறிந்து வாழ்கின்றது. அதே போன்று அலாவுதீன் கடைக்கு அண்மித்த தைக்கா வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அவரது குடும்ப அங்கத்தவர்கள் உள்ளதோடு அதிகளவான ஆதரவும் காணப்படுகிறது.

அது மாத்திரமன்றி அவரது பிள்ளைகளும் குறித்த வட்டாரத்துக்குள்ளேயே திருமணம் செய்துள்ளார்கள். குறித்த வட்டாரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் குடும்ப அங்கத்தவர்கள் பெரிதுமில்லை.  இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் அந்த வட்டாரத்தை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் வெல்வது அவ்வளவு இலகுவானதல்ல.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் சேவைகள் கல்லரச்சல், சம்புமடு ஆகிய பிரதேசங்களை மையமாக கொண்டது. தைக்கா வட்டாரத்தை நோக்கிய அவரது செயற்பாடுகள் மிகவும் குறைவு. இல்லை என்றாலும் தவறில்லை. இப்படியான நிலையில் அவரது சேவைகளால் கூட வாக்கெடுக்க முடியாது. நகர மண்டபத்தை அண்டிய பிரதேசங்கள் மர்ஹூம் அப்துல் மஜீத் எம்.பியின் ஆதரவு கூடிய இடங்கள். அதனை அண்டி அவர் வழங்கிய குடியிருப்பு வீடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் ஒரு போதும் மு.காவை ஆதரிக்க மாட்டாகள். இன்னும் சொல்லப்போனால், தைக்கா வட்டாரத்தில் மு.காவுக்கு விழும் வாக்கு எண்ணிக்கை வழமையாகவே குறைவானது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் தோல்வியை தழுவுவதற்கான வாய்ப்பே மிக அதிகம்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிருக்கு, தனது வட்டாரம் பற்றி இவ்வளவு ஆழமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனது வட்டார ஆழம் தெரியாமல் மாட்டிக்கொண்டார் என்பதே உண்மை.

அடுத்த கட்டுரை:
சில்லறைகளோடு போட்டி போடும் நிலையில் மாஹிர்?

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Previous Post Next Post