​எமது கட்சியின் வெற்றியில் ஈச்சங்குளத்தின் அபிவிருத்தி தங்கியிருக்கிறது. எம்.பி.மஸ்தான்.

NEWS




எமது இந்த ஈச்சங்குளம் கிராமம் பல வகையிலும் பின்னடைவு கண்டிருப்பதைக் கண்டு வேதனைப்படுகிறேன். இதற்கான காரணத்தை அறிவதற்கு நான் முற்படவில்லை. எனினும் எமது கட்சியின் வெற்றியில் இப்பிதேசத்தின் எதிர்காலம் சுபீட்சமடையும் என்பதை இங்கே சொல்லிவைக்க ஆசைப்படுகிறேன்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு  ஈச்சங்குளம் 3ம் வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.சுரேஷ் அவர்களை ஆதரித்து இன்று இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது இத்தேர்தலில்  போட்டியிடும் எமது கட்சியின் வேட்பாளர் எஸ்.சுரேஷ் அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாம் திட்டமிட்ட  பல்வேறுபட்ட அபிவிருத்திகளை இப்பகுதியில் இலகுவாக செய்யக்கூடிய திராணி எமது கட்சிக்குள்ளது.
எனவே உங்களது வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் எமது வேட்பாளருக்கு நீங்கள் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் ஈச்சங்குளம் பகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு
6/grid1/Political
To Top