Top News

நீதிபதிகளுக்கு நிதியமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பு!


சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிபதிகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியமைக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினதும் நீதிபதிகளினதும் சம்பளத்தை கூடிய சதவீதத்தால் அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவ்வாறு செய்தால் ஏனைய துறைகளிலும் பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிய வேளையில் தான் இருக்கவில்லை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பள உயர்வு யோசனையை குழு ஒன்றின் ஏகோபித்த தீர்மானத்தின் அடிப்படையிலே தான் முன்வைத்ததாக விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post