பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போது கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு பிரதேவசித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்காக பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதன் பொருட்டே, விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற கைகலப்பில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிந்திருந்த சட்டைகளும் கிழிந்துள்ளதாகவும். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன மயக்கமுற்று, பாராளுமன்ற மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.