Top News

நீதிமன்ற தீர்ப்பால் கோத்தபாய மகிழ்ச்சி!



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய இணைப்பு

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தி மேன்முறையீட்டு நீதிம்னறம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவு பெப்ரவரி 15 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தலைவர் பீரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.மனுவை ஆராய்ந்த நீதியரசர்கள் தடையுத்தரவை மீண்டும் நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.

டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இந்த வழக்கில் கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்ய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தான் கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி கோத்தாய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதனை விசாரணைக்கு எடுத்த நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது. இரண்டு தடவைக்கும் மேல் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post