Top News

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனிநபருக்கானதல்ல; முஸ்லிம் சமூகத்திற்கானது


பைஷல் இஸ்மாயில் 

கட்சியினால் வழங்கப்பட்ட அனைத்தும் கட்சியோடு பயணிப்பவர்களுக்கே தவிர தனி நபருக்காக அல்ல. கட்சியோடு பயணித்துப் பெற்ற சலுகைகளை தனிநபர் வளர்ச்சிக்காக பயன்படுத்தி இன்று கட்சியையே சந்தியில் நிறுத்தி இருக்கின்ற துரோகத்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மு.கா அட்டளைச்சேனையின் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பளாரும், முன்னாள் மாகாண சுகாதார அமைச்சருமான எ.எல்.முஹம்மட் நசீர்  தெரிவித்தார்.

பாலமுனையில் மு.கா வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (21) இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லீம் காங்கிரஸ் பாலமுனைக்காக பல அதிகாரங்களை தந்திருக்கின்றது. இன்னும் பல அபிவிருத்திகளுக்கவும் திட்டமிட்டு செயற்டுத்தியுள்ளது மற்றும் செயற்படுத்தி வருகின்றது. 

விசேடமாக தலைவரின் அமைச்சின் மூலமாக பாலமுனைக்கு மாத்திரம் 80 மில்லியன் நிதி கடந்த 2017ம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்ல பிரதி சுகாதார அமைச்சின் மூலமாக வைத்தியசாலைக்கான கட்டட வசதிகளை செய்து தருமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் விளையாட்டு துறை பிரதி அமைச்சின் மூலமாக பாலமுனை பொது மைதானத்தினை நாங்கள் அபிவிருத்தி செய்துள்ளோம். 

அட்டாளைச்சேனையின் தவிசாளர் பதவி என்பது சாமான்யமானது அல்ல, அவற்றையும் நாம் இரண்டு முறை பாலமுனைக்கு வழங்கி அழகு பார்த்திருக்கின்றோம். நாம் பலமுனைக்காக நல்லவைகள் பலவற்றை இன்றைக்கும் திட்டமிடுகின்றோம். இன்ஷா அல்லாஹ் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 

அராஜகமான அரசியலை நான் ஒரு போதும் விரும்பியது கிடையாது, அவ்வாறு நாம் நினைத்திருந்தால் எதிர்கட்சியினரால் ஒரு கூட்டத்தைக் கூட அட்டளைச்சேனையில் நடத்தக் கூட முடியாது போயிருக்கும். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை.

எதிர்வரும் 10ம் திகதி வரப்போகும் பலப்பரீட்சை நமக்கானது. நமது எதிர்காலத்திற்காக நாம் இரண்டு கல்விமான்களை உங்கள் தெரிவாக இந்த தேர்தலில் நிறுத்தி இருக்கின்றோம். அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்வோம். என்றும் தெரிவித்தார்.
Previous Post Next Post