Top News

தற்காலிக கடல் கொந்தளிப்பு மற்றும் கடும் காற்று வீசும் சாத்தியம்!


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

அந்த வகையில், இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் கடற் பகுதிகள் தற்காலிகமாக கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வட கிழக்குத் திசையில் இருந்து வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கடற் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Previous Post Next Post