திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த கனேடிய தூதுவர்

NEWS


கனேடிய தூதுவருக்கும், திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சமூக சிவில் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கினன் இன்று(19) திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போதே இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக காணிப்பிரச்சினை இந்த மாவட்ட முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பாரிய பிரச்சினையாகும். இது தொடர்பிலும் குறித்த சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top