Top News

பாலஸ்தீன் மீது டிரம்ப் பாய்ச்சல்: நிதியுதவி நிறுத்தப்படும் என மிரட்டல்



பாகிஸ்தானுக்கு இத்தனை ஆண்டுகள் நிதியுதவி அளித்து வந்தாலும், தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாக அந்நாடு நினைத்து விட்டது என அதிபர் டிரம்ப் அதிரடி கருத்துக்களை வெளியிட்டார். மேலும், அந்நாட்டுக்கான நிதியுதவியையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.


இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கான நிதியுதவியும் நிறுத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளாவது:-

எந்த பலனும் இல்லாமல் மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவளித்தது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, நிறைய நாடுகளுக்கும் தான். உதாரணமாக பாலஸ்தீனுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதி அளித்தும் ஒரு மரியாதையும் கிடைக்கவில்லை. இஸ்ரேலுடன் நீண்ட காலமாக உள்ள பிரச்சனையை பேசித் தீர்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.

ஜெருசலேம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் பேச்சுவார்த்தையிலேயே மிக கடினமான பகுதி அது. ஆனால், இஸ்ரேல் தனது பங்கினை செலுத்த தயாராக உள்ளது. பாலஸ்தீன் அமைதியான பேச்சுவார்த்தைக்கே விருப்பம் இல்லாமல் இருக்கிறது. நாம் ஏன் அவர்களின் பெரிய எதிர்காலத்திற்கு பணம் செலுத்த வேண்டும்?
           


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த கருத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. அதே, வேளையில் இது பாலஸ்தீன தரப்பில் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

Previous Post Next Post