தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்புமுஸ்லிம்களுக்கு அக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்துமலசலகூடம் என கொழுப்பு மாநகர சபைக்கு பொதுஜன பெரமுனவில்போட்டியிடும் வேட்பாளர் செனானி சமரநாயக குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் மத்திய கொழும்பு முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்குவிஜயம் செய்த அவர் அங்கு அவர்களிடம் கருத்து வெளியிடுகையில் இதனைகுறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளிட்ட அவர்,
மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டை என அக்கட்சி காரர்கள்பெருமையாக கூறுவார்கள் ஆனால் அக்கட்சி அம்மக்களுக்கு செய்துள்ளசேவைகள் என எதுவும் இல்லை.
தொடர்ச்சியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வரும் கொழும்புமுஸ்லிம்களுக்கு அக்கட்சி கொடுத்த பிரதி உபகாரம் நூறு வீடுகளுக்கு ஐந்துமலசலகூடம்,நான் அறிந்தவரை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கொழும்புமத்தியில் வீட்டுபிரச்சினை பாரிய அளவில் உள்ளது.
ஒரு அறையில் மூன்று குடும்பங்கள் வாழும் அகலமும் இங்குஇடம்பெறுகிறது.அதேபோல அரசாங்க பாடசாலைகளில் அடைப்படை வசதிகள்மிக அரிதாக காணப்படுவதால் கூலித்தொழிலாயின் பிள்ளைகளும் சர்வதேசபாடசாலைகளில் பணம் செலுத்தி கல்வி கற்க வேண்டிய நிலையே உள்ளது.
உண்மையில் கொழும்பு முஸ்லிம்களை ஐக்கிய தேசிய கட்சி வாக்களுக்கும்இயந்திரமாக பயன்படுத்திவருகின்றனர்.இந்த நிலை மாறவேண்டும்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் சில முஸ்லிம்அமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடாக பலதரப்பட்ட அபிவிருத்திபணிகளை முன்னெடுத்தார்கள்.
வடக்கில் கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக அங்குள்ள முஸ்லிம்கள்பல்வேறுபட்ட அபிவிருத்திகளை பெற்றுக்கொண்டார்கள் ஆனால் வடக்கு கிழக்குக்வெளியே குறிப்பாக கொழும்பு முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்அடிமைகளாக இருந்து பெற்றுக்கொண்டது எதுவுமே இல்லை என குறிப்பிட்டார்.