Top News

சபைகளை நாம் ஆழ்வோம் –முன்னாள் அமைச்சர் நஸீர்



(றியாஸ் இஸ்மாயில்)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான இந்த வட்டாரத் தேர்தலில் எங்களுடைய  வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் நாம் முழுமையாக செயற்பட்டால் எமக்கான சபைகளை நாங்கள் இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஒலுவில் அஷ்ஹர் வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.அமானுல்லாவை ஆதரித்து ஒலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக  கல்முனை மாநகர சபை உட்பட அனைத்து சபைகளையும் பெரும்பாண்மைப் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தை தன்வசப்படுத்தும் இதில் எந்த விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை எமது கட்சியின் போராளிகள் மாற்றுக் கட்சியினரின் பணத்திற்கோ அல்லது பரிசுப் பொதிகளுக்கோ அல்லது பொய் வாக்குறுதிகளுக்கோ தலைசாய்க்க மாட்டார்கள்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் அக்கரைப்பற்று நிந்தவூர் சாய்ந்தமருது கல்முனை மருதமுனை சம்மாந்துறை போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் தேசியப்பட்டியல் மூலமாகவும் தேர்தல் ஊடாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற அட்டாளைச்சேனை தேசியப் பட்டியல் விடயம் நமது  பிரதேசத்திற்கு நிட்சயமாக நமது தலைவரின் ஏற்பாட்டில் பொருத்தமான நேரத்தில் வழங்கப்படும் விடயத்தில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.மாற்றுக் கட்சியினர் இவ்விடயத்தினை கூறி வாக்குப் பெற வாருவார்கள் இதற்கெல்லாம் இடமளிக்க வேண்டாம்.

இவ்வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.அமானுல்லா அட்டாளைச்சேனை பிரதேச சபையில் முன்னர் உதவித்தவிசாளராக இருந்து எனது மாகாண அமைச்சு,தலைவரின் அமைச்சு மற்றும் நமது கட்சியின் பிரதியமைச்சர்கள் ஊடாகவும் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பல்வேறு சேவைகளை செய்தமையையும் தற்போது செய்து வருவயும் இவ்விடத்தில் தெரியப்படுத்தியாக வேண்டும் 

ஒலுவில் பிரதேசம் எப்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகும் இங்கு இரண்டு வட்டாரத்திலும் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றிக்காக நமது கட்சியின் போராளிகள் இளைஞர்கள் மகளீர் அமைப்பினர் மற்றும் மத்திய குழுவினர் இரவு பகல் பாராது முன்னின்று உழைக்க வேண்டும் அப்போது தான் அட்டாளைச்சேனை பிரதேச சபையிலுள்ள 11 வட்டாரத்தையும் நாம் வெற்றி பெற்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை மீண்டும் மாற்றுக் கட்சியினருக்கு நிறுபித்துக் காட்டலாம் என்றார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பெயர் குறிக்கப்பட்ட பட்டியல் வேட்பாளரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எல்..கலீல்,வேட்பாளர் ஏ.எஸ்.எம்.

உவைஸ் வட்டாரத்தின் ஏனைய வேட்பாளர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post