நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற குழப்பநிலை, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குழைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக இரகசிய அறிக்கையொன்று நாடாளுடன்ற பாதுகாப்பு பிரிவிற்கும், சபாநாயகர் காரியாலயத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
பிணை முறி விநியோகம் அறிக்கையின் பிரதி சபைக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்ததற்கு பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்ற நடடிக்கைகைகளுக்கு தொடர்ந்து தடை ஏற்படுத்தி வந்தார்.
இதனுடன் அவர் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டிவிட்டு, நாடாளுமன்ற மத்திய பகுதிக்கு வந்து ஏற்கனவே திட்டமிட்டப்படியே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரைக்கு தடை ஏற்படுத்தி, சபையின் நடவடிக்கைகளை சீர்குழைத்தாக சபாநாயகர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.