ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
வீடியோ கபூர் ஹாஜியின் கருத்து : -
www.youtube.com/watch?v=JSylxNpkLyQ&feature=youtu.be
தான் தேர்தலில் வெர்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படு பட்சத்தில் தனக்கு மாதாந்தம் கிடைக்கும் கொடுப்பனவுகள் அனைத்தையும் ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் புதிதாக கட்டப்படும் ஹுதா ஜும்மா பள்ளிவாயலின் பைத்துமால் நிதியத்திற்கு தொடர் தேர்ச்சியாக கொடுப்பேன் என கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கான தேர்தலில் முதலாம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் HMA-கபூர் ஹாஜியார் மேற் கண்டவாறு ஊடகங்கள் மூலமாக பிரதேச மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
ஓட்டமாவடி முதலாம் வட்டாரத்தில் புதிதாக அமைக்கப்படுகின்ற ஹுதா ஜும்மா பள்ளிவாயலில் கட்டுமான பொருலாளராக இருக்கும் கபூர் ஹாஜியா மேலும் தனது கருத்தினை கூறுகையில்.. வன்னி மாவட்டத்தில் இருந்து வெறும் கையுடம் 1990ம் ஆண்டு விரட்டி அடிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையான றிசாட் பதுர்டீன் தற்பொழுது இருக்கின்ற முஸ்லிம் தலைமைகளுக்குள் முஸ்லிம்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய காணி, மீள்குடியேற்ரம், மற்றும் இன்ன பிற பிரச்சனைகளுக்காக மானசீக ரீதியாகவும் தூர நோக்கு சிந்தனையுடனும் செயலாற்ற கூடிய தலைமையாக இருந்து வருகின்றது.
அதே போல் கல்குடாவிற்கு சுமார் இரண்டு தசாப்பதங்களாக அரசியல் தலைமையினை வகித்து வரும் பிரதி அமைச்சர் அமீர் அலி ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து இழக்கப்பட்ட காணிகளை மீண்டும் பெற்றுத்தரும் விடயங்களில் அவர் எடுத்துக்கொள்கின்ற தியாகங்கள், வரலாற்றில் பதியப்பட வேண்டிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம்,பிரதேச கல்விக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம், வீட்டுக்கொரு பட்டதாரி எனும் அவருடைய திட்டங்கள் போன்றவை என்னை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக இப்பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு பிரதி அமைச்சர் அமிர் அலியின் வழி காட்டலின் பெயரின் எனது வாட்டாரத்திற்கு தேவையாக உள்ள அபிவிருத்திகளை மேற்கொள்ளும் விடயத்தில் என்னை தூண்டியுள்ள விடயமாக மாற்றியுள்ளது. என தெரிவித்தார் ஓட்டமாவடி முதலாம் வட்டார வேட்பளர் கபூர் ஹாஜியார்.
மேலும் கபூர் ஹாஜியார் தனது அரசியல் முன்னெடுப்பு சம்பந்தமாக தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.