பாரிய ஊழல் மோசடி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை ஏழு ஆண்டுகளுக்கு அல்ல, வாழ்நாள் முழுவதும் பறிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மொரவக பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்இன்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மலர் மொட்டு சின்ன கட்சியுடன் கூட்டுச் சேர்வது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் கதைக்கின்றனர்.
“நாம் கூறுகின்றோம். அப்படியானால் மஹிந்த ராஜபக்ஷவின் இந்தப் பிரச்சினைக்கும் அப்போது அவர்கள் தீர்வு தேட வேண்டியிருக்கும் என்று” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு அவப்பெயரும் ஏற்பட வாய்ப்பில்லை. இதில், ஐ.தே.கட்சிக்கோ தனக்கோ எதிராக எந்தவொரு பரிந்துரையும் செய்யப்படவில்லை. இது குறித்து ஒருமுறையல்ல மூன்று முறை பாராளுமன்றத்தில் கூறினோம். எமக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. வாயை வெட்டினாலும், அதிகாரத்துக்காக பொய் சொல்பவனல்ல நான் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.