மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வளமாகும். ஒரு அங்குல மண் உருவாவதற்கு 300-1000 வருட காலம் தேவைப்படுகிறது.
ஒரு செடி செழுமையுடன் வளர்ந்து அதிக விளைச்சல் தர வேண்டுமானால் அதற்கு ஏழு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவை 1.சூரிய ஒளி 2.கரியமில வாயு 3.ஆக்ஸிஜன் 4.தண்ணீர் 5.தாது உப்புகள் 6.மண் பிடிமானம் மற்றும் 7.மண்வெப்பம் இதில் முதல் மூன்றும் சூரிய ஒளி மூலமும், காற்று மூலமும் பயிருக்கு கிடைத்துவிடுகிறது. மற்றைய ஐந்து தேவைகளும் மண்ணிலிருந்து தான் பெற்றாக வேண்டும்.
அதிகபடியான மழை, காற்று மற்றும் வெப்பம் ஆகிய தாக்குதல்களால் மண்ணிலுள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு மண் குறைவு ஏற்படுகிறது. எனவே மண் வள மேலாண்மை அதிக விளைச்சல் பெறவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
இலங்கையின் மண் ஆய்வு
வீடியோ