2௦14இல் நாட்டில் இனவாதம் தலைதூக்கி இருந்ததுடன், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்த வண்ணம் காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2௦15 ஜனவரி 8ம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்றது.
அப்போது தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னால் ஜனாதிபதி அவர்கள் அதன் ஒரு கட்டமாக அக்குரஸ்ஸ பஸ் தரிப்பு நிலையத்தை சில நாட்களுக்கு அப்புறப்படுத்தி அங்கு மாபெரும் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அதே பாணியில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு தற்போதைய ஜனாதிபதியும் 3 நாட்களுக்கு பஸ் தரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்தி வெறும் 2 மணிநேர தேர்தல் பிரசாரம் செய்தார்.
தற்போது நாட்டு நிலைமையை அவதானித்தால் இனவாதம் மந்த கதியில் காணப்பட்டாலும், பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டு உள்ளது. (தேங்காயின் விலை >=1௦௦) இதனால் தற்போதைய அரசின் மீது பொது மக்களின் வெறுப்பு அதிரித்த வண்ணமுள்ளது.
இந்நிலையில்தான் ஜனாதிபதி அக்குரஸ்ஸைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். முன்னால் ஜனாதிபதியும் அக்குரஸ்ஸைக்கு வந்துவிட்டு வீடு சென்றது போல் இவரும் வீடுசெல்வரா??? பதிலை உள்ளூராட்சி மன்ற தேர்தல் வழங்கும்.