( ஐ. ஏ. காதிர் கான் )
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மா நகர சபைக்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக, கொழும்பு - புதுக்கடை சந்தியில் இன்று (25) வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு, மா பெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மத்திய கொழும்பு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.