Top News

ரோசி மேயரானால் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் - சஜித் பிரேமதாச





மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் அவா் கொழும்பில் முன்னெடுத்த திட்டங்கள் மீள உருவாவதற்கும் அதனை மீள புத்தெழுச்சி ஊட்டுவதற்கும் , அபிவருத்திக்கும் கொழும்பு வாழ் மக்கள் மேயராக முதன் முதலில் அதுவும் ஒரு பெண்ணான உலக பிரசித்த பெற்ற ரோசி சேனாநாயக்காவினை தெரிபு செய்யுங்கள். அவா் மேயரா் ஆகும் போது அது பெப்ரவரி 10 ஆம் திகதி சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சரும் ஜ.தே.கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.

மேற்கண்டவாறு கொழும்பு 07 ஜ.தே.கட்சியின் மேயா் வேட்பாளா் ரோசி சோனாநாயக்காவின் தோ்தல் அலுவலகமொன்றை (8)ஆம் திகதி இரவு திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா். இந் நிகழ்வில் அமைச்சா் சாகல ரத்நாயக்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜிபு ரஹ்மான் , எஸ்.எம் மரிக்காரும் காலந்து சிறப்பித்தனா்.

அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு தொடா்ந்து உரையாற்றுகையில் –

மறைந்த எனது தந்தையான ஆர் .பிரேமதாச அவா்கள் ஆட்சிக் காலத்தில் கொழும்பு வாசிகளுக்கு அவா் ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தாா். கொழும்பு பாதை பாதையாகச் சென்று முடுக்கு வீடுகள் என பலள திட்டங்களை வகுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை அவா் மேற்கொண்டாா்.


அதன் பின்னா் ஜ.தே கட்சி 17 வருட ஆட்சிக்கு பின் வந்த 94ஆம் ஆண்டுக்கு பின் ஆட்சியிற்கு வந்த அரசு அந்த அமைச்சினை வீடுகள் நிர்மாணிக்கவென பல்வேறு அமைச்சுக்களை பிரித்து வைத்துள்ளது. தற்போழுது எனது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிக்கு தரப்பட்ட அதிகாரங்களுக்குள் என்னாள் முடிந்தஅளவு செமட்ட செவன வீடமைப்புக் கடன்களை வழங்கி வீடுகளை நிர்மாணித்து வருகின்றேன் ஆனால் வீடுகளை நிர்மாணிக்கவென 6 அமைச்சுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

கொழும்பில் வீடுகளை நிர்மாணிக்க மேல்மாகண அபிவிருத்தி மெஹா பொலிஸ் அமைச்சு, மலையகத்தில் வீடுகளை நிர்மாணிக்க மலையக அபிவிருத்தி அமைச்சு, மீன்பிடி வீடமைப்புக்களை மீன் பிடித்துறை அமைச்சு, அனா்த்தங்களில் பாதிக்கப்படும் வீடுகளை அனா்த்த நிவாரண அமைச்சு, வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்க்பபட்ட மக்களுக்கு மீள் குடியேற்ற அமைச்சு என பல அமைச்சுக்கள் இந்த நாட்டில் வீடுகளை நிர்மாணிக்கின்றன.

இருந்தும் தோ்தல் முடிந்தவுடன் கொழும்பு மேயராக தெரிபு செய்யப்படும் ரோசி சேனாநாயக்கவுடன் இணைந்து தன்னால் செமட்ட செவன வீடுகளை நிர்மாணிப்பதற்கு எனது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுப்பேன். மறைந்த ஆர். பிரேமதாசாவின் கொழும்பு மீள கட்டியெழும்பு யுகம் மீண்டும் புத்தெழுச்சி பெறும். அதற்காக ரோசி சேனாநாயக்கவுடன் இணைந்து பாடுபடுவேன் என அமைச்சா் சஜித் பிரேமதாச அங்கு உரையாற்றினாா்.

அஷ்ரப் ஏ சமத்
Previous Post Next Post