கிந்தோட்டை கலவரம் தொடர்பில் மூச்சு விடாத சிரிசேனவின் தேர்தல் பிரசாரகூட்டங்களை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என பானதுறை பிரதேச சபைமுன்னாள் தலைவரும் இம்முறை தேர்தலில் பொதுஜன பெரமுனவில்பேட்டியிடும் வேட்பாளருமான இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது.
ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிமைத்திரிபால முஸ்லிம்கள் தொடர்பில் தனது அசமந்த போக்கை வெளிப்படுத்திவருகிறார்.
அன்று அலுத்கமை கலவரம் இடம்பெற்ற போது வெளிநாட்டில் இருந்த மஹிந்தராஜபக்ஷ நாட்டிற்கு வந்து நேரடியாக பேருவளைக்கு சென்றார். ஆனால்முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடித்த சிரிசேன இதுவரை கிந்தோட்டைபக்கமும் திரும்பிப்பார்க்கவில்லை.
அது மாத்திரம் அல்லாமல் கடந்த தேசிய மீழாத் விழாவையும் அவர்புறக்கணித்திருந்தார். இப்படியான ஒரு ஜனாதிபதி வாக்கு பிச்சை கேட்டு முஸ்லிம்ஊர்களுக்கு வருகிறார்.முஸ்லிம்கள் விடயத்தில் பாராமுகமாக இருக்கும்சிரிசேனவின் தேர்தல் பிரசார கூட்டாங்களை சொரணை உள்ள முஸ்லிம்கள்புறக்கணிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.