மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் உரிய பணம் மீள வழங்கப்பட்டாலும் குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். குற்றவியல் சட்டத்தின் ஊடாக இவர்கள் தண்டிக்கபடுவது உறுதி என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
குற்றவாளிகளை தண்டிக்க இருக்கும் முக்கிய சாட்சியங்கள் இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும், தடையங்களை அழிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.
ஆணைக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சில இடங்களில் சாட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை இரகசியமாக பாதுகாக்க வேண்டும். குற்றங்கள் நிருபிக்கப்பட அதுவே இருக்கும் முக்கிய தடையங்கலாகும்.
ஆகவே பிரசித்தியாக வெளியிடக்கூறுவதன் மூலமாக குற்றவாளிகள் தப்பிக்க நாமே வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடாது. ஊழல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீது எமக்கு 200 வீத நம்பிக்கை உள்ளது. ஆணைக்குழுவினர் மிகவும் துல்லியமாகவும், உயரிய ரீதியிலும் தமது கடமைகளை செய்து வருகின்றனர். கோப் குழுவின் மூலம் கண்டறிய முடியாத விடயங்களை ஆணைக்குழு கண்டறிந்து வெளிப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று -11- கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.