Top News

குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பு என்னுடையது என்கிறார் ஜனாதிபதி.!



மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. பாராளுமன்ற இணையதளவூடாக அறிகையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பை நானே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் ஊழல் விவகாரம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் உண்மைகளை கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவினால்  ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு 10 மாதங்கள் சந்தேகத்துக்குரிய சகல தரப்பையும் விசாரணை செய்ததுடன் ஆணைக்குழு தயாரித்த அறிக்கையினை கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 30 ஆம்  திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்தது.  இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஜனாதிபதி ஒரு சாராம்ச தகவலாக வெளியிட்டிருந்த நிலையில் முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கியிருந்தார். 

இந்நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கக்கோரி எதிரணிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் நாளை குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 
Previous Post Next Post