எதிர் வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பலாஹ் வட்டாரத்தில் அரசியல் கட்சியொன்றில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரினால் பணம் மற்றும் உணவுப்பொதிகள் வழங்கப்படுவதாகவும் இது தேர்தல் நடவடிக்கைக்கு முற்றிலும் முரணாண செயற்பாடு என்பதனால் இதனை உடனடியாக நிறுத்துமாறும், தேர்தல் கண்காணிப்புக்குழு தேர்தல் ஆணையாளரிடமும் தெரியப்படுத்தியதாகவும், அப்பிரதேச மக்களும் மற்றும் மாற்றுக்கட்சி வேட்பாளர் நுஹமான் தெரிவித்தனர்.
சுமார் 1921 வாக்காளர்களைக் கொண்ட பலாஹ் வட்டாரத்தில் தேர்தல் நெருங்கி வரும் காலம் என்பதனால் இப்படியான செயற்பாடுகளை நிருத்துமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.