எம்.வை.அமீர்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி (2018-01-17 ) 11 மணிமுதல் 12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது.
01. MCA கொடுப்பனவு 5 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு அமைய 2018 ஜனவரி மாதம் கிடைக்கவேண்டிய 20% அதிகரிப்புக்குரிய சுற்று நிருபத்தை இதுவரை வழங்கவில்லை.
02. இந்த இணக்கப்பாட்டில் 1(iv) யை முறித்துக்கொண்டு 2017.06.15 ஆம் திகதி ஆணைக்குழு சுற்றுநிருப இலக்கம் 13/2017 மூலம் ஒரு பிரிவினருக்கு மட்டும் 15% இல் கொடுப்பனவுகளை அதிகரித்தல் மற்றும் அதனை இதுவரை கல்விசாரா ஊழியர்களுக்கு வளன்குவதற்கு நடவடிக்கை எடுக்காமை.
03. இணக்கப்பாட்டில் 1(ii) க்கு அமைய அந்த கொடுப்பனவு 2016-01-01 திகதியில் முன்னுரிமை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை.
04. இடை நிறுத்தப்பட்டிருக்கின்ற மொழிக்க்கொடுப்பனவுவை வளன்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காமை.
05. பல்கலைக்கழக சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக் கடன் முறையில் கல்விசாரா ஊழியர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால கடன் எல்லையை விலக்கி சகல சமூகத்துக்கும் உச்ச கடன் எல்லையை 02 மில்லியன் ஆக்குதல்.
06. சகல பல்கலைக்கழக சமூகத்துக்கும் பயனான வைத்தியக் காப்புறுதி முறை மற்றும் ஓய்வூதிய சம்பள முறை ஒன்றினை தயாரிதற்கான ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களை இதுவரை செயற்படுத்தாமை.
போன்ற காரணங்களை முன்வைத்தே குறித்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற்றது.
எதிர்வரும் 2018-01-23 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சருடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காதவிடத்து தொடர் போராட்டங்களை செய்யவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.