அப்துல் ஹனீப்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்துள்ள இந்நிலமையில் இந்த கூட்டு தற்பொழுது திகாமடுல்ல மாவட்டத்தில் பெரும் பலமாக உருவெடுத்துக்கொண்டு வருகிறது.
முஸ்லிம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்கள் முன்னாள் மேயர்கள், தவிசாளர்கள், இதர கட்சிப் போராளிகள் இந்த கூட்டுடன் இணைந்துள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஹரீஸ் அவர்களும் இணையப்போவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது இந்த தகவலின் நம்பகத்தன்மை எவ்வாறு என்பதை கேள்விக்குறியாக வைத்துவிட்டு ஹரீஸ் அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி கட்சி முக்கியஸ்தர்கள் பல முரண்பாடான கருத்துக்களுடன் இருப்பதாக அறியக்கிடைக்கிறது.
ஹசனலி - அன்சில் - தாஹிர் ஆகியோர் தொலைபேசி மூலம் ஹரீசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் எமது புலனாய்வு செய்தியாளர் குறிப்பிட்டார்.