அரச துறையினை தனியார் மயப்படுத்தும் நோக்கத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகளை தடுக்கும் போராட்டங்களை மக்கள் விடுதலை முன்னணி தொடர்ந்தும் முன்னெடுக்கும் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை. மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் போராட்டம் எம்மால் மாத்திரமே முன்னெடுக்க முடியும். வாழ்வாதார சிக்கல் அதிகரித்துள்ளது.
அவர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். சலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதனை நாம் எப்போதுமே முன்னெடுப்போம். தனியார் துறையாக மாறும் அரச துறையினை காப்பாற்றும் பொறுப்பை நாம் கையில் எடுப்போம். ஆகவே இப்போது தபால் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் அரச சேவையினர் சிந்தித்து சரியான தெரிவுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.