பிரதமர் ரணிலைச் சிறையில் போட்டுவிட்டு ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக ஸ்ரீ ல.சு.க.யின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியதாக குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பிரணாந்தோ தெரிவித்தார்.
பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். திருடர்களைப் பிடிப்பதாக தெரிவித்து வந்த அரசாங்கம் இரு மாதங்கள் கழிவதற்குள் பாரிய திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.