Top News

ராஜித சேனாரத்ன மீது குற்றச்சாட்டு!



அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளது.

அதனடிப்படையில், இலங்கை மருத்துவ சபையின் புதிய குழு ஊடாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சைட்டத்தை மீண்டும் சட்டபூர்வமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அரச அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கேவால் இந்த குற்றசாட்டு முன்வைக்கபட்டுள்ளது.

இதேவேளை, பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவினால் வழங்கப்பட்ட இறுதி தீர்மானத்தின் படி இது தொடர்பான பிரச்சினை வலுப்பெற்றுள்ளதாக மாலபே தனியார் மருத்துவ கல்லுரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post