Top News

அதாவுல்லாஹ் சூழ்ச்சிகளை முறியடித்து தேர்தல் காலம் முடிந்த பின்னர் மீண்டும் போராட்டம் தொடரும்



அக்கரைப்பற்று மேலதிக நிருபர்.

அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடுக்காணிகளின் ஐந்து வட்டைகளின் அமைப்புகளின் செயளாளர் ஜுனைன் ஜே.பி. அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் 

வட்டமடு காணி மீட்புப்  போராட்டத்தை கொச்சைப்படுத்தினார் முன்னாள் அமைச்சர் அம்பாரை மாவட்ட கரையோர வாழ் முஸ்லீம்களின் காணிகள் பறிக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரைக்கும் எமது அரசியல் தலமைகள் கண்மூடி வாய் பொத்தி மௌனியாக இருந்து விட்டு தற்போது தேர்தல் காலம் என்பதால் முன்டியடித்துக் கொண்டு காணிப்பிரச்சினை அனைத்தும் தீர்க்கப்படும் என கூறித் திரிகின்றனர்.

தான் அமைச்சராக இருந்த போது நமது பிராந்திய விவசாய நிலங்கள் வன பிரதேசமாக கபளிகரம் செய்யப்பட்ட போது மௌனம் சாதித்தவர், விவசாயிகள் தமது வட்டமடு காணிகளை மீட்பதற்காக 48 நாட்களுக்கு மேலாக சந்தை சுற்று வட்டாரத்தில் இரவு பகலாக மழையிலும் வெயிலிலும் போராட்டம் நடாத்தி வந்தனர். அவர்கள் போராட்;டம் தனது அரசியல் பயணத்திற்கு குந்தகம் ஏற்படுத்திவிடும் என்றெண்னி நமது முன்னாள் அமைச்சர் தனக்கு ஆதரவான வட்டமடு விவசாயிகள் சிலரை விலைக்கு வாங்கி தனது அரசியல் நாடகத்தை நடாத்திச் சென்றிருக்கினறார்.           

தான் ஜனாதிபதியிடம் கதைத்து சிலநாட்களுக்குள் வட்டமடு காணிப்பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாகவும் அதற்காகப் தங்களுக்கு சாதகமான விவசாயிகளை வைத்து போராட்டத்தைக் கைவிடுமாறும் தெரிவித்தார். இதனால் எமது விவசாய அமைப்பு இரண்டாகப் பிளவுபட்டு இன்று எவ்விதமான நடவடிக்கைகளுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 இவ்வாறு தான் சுயலாப அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக உண்மையான விவசாயிகளின் போராட்டத்தையே மழுங்கடிக்கச் செய்தார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் இவரின் சூழ்சிகள் எல்லாவற்றையும் முறியடித்து தேர்தல் காலம் முடிந்த பின்னர் மீண்டும் எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

Previous Post Next Post