Top News

அதாவுல்லாவிற்கு எதிராக பொலீஸில் முறைப்பாடு





ஒரு வட்டாரத்தின் வேட்பாளருக்கு மேலதிகமாக இன்னொரு வேட்பாளரை நியமித்ததிருப்பதாகக் கூறி மக்களைத் திசை திருப்ப முனைந்ததற்கெதிராக தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாஹ் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிப்பட்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று மாநகர சபையின் நூராணியா வட்டாரத்திற்கான தேசிய காங்கிறசின் வேட்பாளர் றபிக் அவர்கள் தடுக்கப்பட்ட போதை தரக்கூடிய 23000 மாத்திரைகளை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டார்.

இவ்வாறானவர்களை வேட்பாளர்களாக போட்டமைக்காக தேசிய காங்கிரசின் தலைவர் மீது அக்கரைப்பற்றிலும் நூராணியா வட்டாரத்திலும் பாரிய அதிருப்திகள் காணப்பட்டன.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக அந்த வட்டாரத்திற்கு பட்டியலில் இருக்கும் முன்னாள் அதிபர் அன்ஸார் அவர்களை மேலதிக வேட்பாளராகவும்,கள வேட்பாளராகவும் நியமித்துள்ளதாக சென்ற செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்றில் நடந்த கூட்டமொன்றில் அதாவுல்லா அவர்கள் தெரிவித்தார்கள்.

அவருடைய பேச்சினைத் தொடர்ந்து சமூக வலைத் தளங்களிலும், மக்கள் மத்தியிலும் நூராணியா வட்டாரத்தின் வேட்பாளராக அன்ஸார் அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார் என்று நம்பப்பட்டது.

ஆனால் ஒரு வேட்பாளர் மரணித்தாலன்றி எந்த சந்தர்ப்பத்திலும் வேட்பாளர்களை மாற்ற முடியாது என்று உள்ளூராட்ட்சித் தேர்தல் சட்டம் சொல்கின்றது.

வார்த்தை ஜாலங்களைப் பயன்படுத்தி மக்களைத் திசை திருப்பி பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களைத் திசை திருப்ப முனைகிறார் என்று தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லாஹ்விற்கு எதிராக இரண்டு வேட்பாளர்கள் நேற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

நூராணியா வட்டாரத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சுல்பிகார் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி வட்டாரத்தில் போட்டியிடும் மக்கள் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் றமிஸ் ஆகியோர் பொய்ப் பிரச்சாரம் செய்தமைக்கு எதிராக தேசிய காங்கிறசின் தலைவருக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.

விசாரணைக்காக தேசிய காங்கிறசின் தலைவர் பொலிசுக்கு அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.
Previous Post Next Post