அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வளரும் நட்பு முஸ்லிம் உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாகிஸ்தான் எதிர்வு கூறியுள்ளது.
பாகிஸ்தானின் செனட் சபை அலுவலக அறிக்கையொன்றினுாடாக செனட் சபை தலைவர் ரசா ரப்பானி இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சூழல் மாறிக்கொண்டு வருகிறது. இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இடையே வளர்ந்து வரும் நட்புறவு முஸ்லிம் உலகத்திற்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது. எனவே, இதை எதிர்கொள்ள முஸ்லிம் உலகம் ஒன்றிணைய வேண்டும்.
சட்ட ரீதியான மற்றும் வரலாற்று அந்தஸ்து கொண்ட ஜெரூசலம் விவகாரத்தில் அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் என்பவற்றை அப்பட்டமாக மீறிய செயல் ஆகும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.