எமது கல்முனை பிராந்தியத்தில் அண்மைக் காலமாக கல்வித்துறையில் ஏற்படும் சரிவினை நிவர்த்தி செய்யும் முகமாக பல்கலைக் கழகங்களிற்கு எம்மவர்களை அதிகமாக உள்ளீர்ப்பு செய்வதற்கான ஆலோசனை, மற்றும் வழிகாட்டல் செயலமர்வு இம்முறை 2017 ம் ஆண்டு உயர் தரம் எழுதிய மாணவர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் அடிப்படை தகைமையை கொண்டுள்ள (3S) மாணவர்களை மையமாக கொண்டு இக் கல்வி வழி காட்டல் செயலமர்வு தொடர உள்ளதனால் , பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தெரிவு செய்யப்படாத மாணவர்களும் இதில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
மேலும் இச் செயலமர்வில் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற அனுமதி நூலினை தயார்படுத்துதல் மற்றும் பூரணப்படுத்துதல், தகுதியான பாடநெறிகளை தெரிவு செய்வதற்கும் மற்றும் தற்கால தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையிலான முறையில் அந் நூலை பூரணப்படுத்துவதற்கான நிறைவான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளன.
இச் செயலமர்வில்,
- பல்கலைக்கழக வாய்ப்புக்களை உறுதி செய்தல்.
- தகுதியான நிலைப்பேறான தொழில் வாய்ப்புக்களை இனங் காணல்.
- இதர தொழில் வாய்ப்புகளை இனங்காணல்.
மற்றும்
*பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களிற்கான உயர் கல்வி வாய்ப்புகளிற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளது.
இந் நிகழ்வானது
எதிர்வரும் வியாழக்கிழமை 11.01.2018 பி.ப 3.00-5.30 மணிவரை
கல்முனை செய்லான் வீதியில் அமைந்துள்ள இக்பால் சன-சமூக நிலைய கட்டிடத்தில் இடம் பெறவுள்ளது
எனவே இவ் இலவச வழிகாட்டல் செயலமர்வானது பல்கலைக்கழக விரிவுரையாளர்களை கொண்டு நடாத்தப்படவுள்ளதால் கடந்தாண்டு(2017) உயர்தர பரீட்சை எழுதி பெறுபேறுகளை பெற்றுள்ள சகல ஆண், பெண் மாணவர்களையும் அன்பாக அழைக்கிறோம்.
குறிப்பு :
குறிப்பிட்ட ஆசனங்ளே உள்ளதனால் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன் கூட்டியே தங்களது பதிவுகளை முன்பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
தொ.இல:
0757979430
0702149779
ஏற்பாடு:
இளம் பட்டதாரிகள் அமைப்பு -கல்முனை.(KUA)